புதன், 26 மார்ச், 2014

எங்கள் பள்ளியில் நடைபெற்ற  ஆண்டு விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில்

சில துளிகள் 









       பள்ளி ஆண்டு விழா சிறப்புரை


                         சென்னை நடுநிலைப் பள்ளி,மடுமா நகர், பெரம்பூர், சென்னை.11.  பள்ளியில் 07.03.2014 அன்று  பள்ளி ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இவ் விழாவில் சென்னை மாநகராட்சி கல்வி அலுவலர் திரு.P.பேரின்பராஜ் அவர்கள் மாநகராட்சி கல்வித் துறை மாணவர்களுக்கு சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வரும் நலத் திட்டங்க்களை கூறி மாணவர்களை சிறந்த முறையில் கல்வி கற்க கூறினார்.




         மருத்துவர் திரு.S.மணிகண்டன் அவர்கள்  மானவர்களுக்கு அமெரிக்க நடிகர் அர்னால்ட் அவர்களின் உண்மை கதையை கூறி மாணவர்களை உற்சாகம் ஊட்டினார். 



                       திரு. C.அசோக்குமார், வட்டார  செயலாளர், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மண்டலம் 4 அவர்கள் மானவர்களுக்கு ஒழுக்கத்தின் சிறப்பைக் கூறி  மாணவர்கள் ஒழுக்க்த்துடன் திகழ வழிகாட்டினார்.



                          திரு.ரகுபதி, வட்டார பொருளாளர், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணிமண்டலம் 1 அவர்கள் மாணவர்கள் கல்வி கற்பதுதான் வாழ்கையில் உயர ஒரே வழி என்று கூறினார்,



            திருமதி. கேதரின் மண்டல பொறுப்பாளர் அனைவருக்கும் கல்வி இயக்கம் மண்டலம் 4 அவர்கள் அனைவருக்கும் கல்வி இயக்ககம் மானவர்களுக்கு செய்து வரும் நன்மைகளை எடுத்து கூறி மாணவர்களை உற்சாகம் ஊட்டினார். 



செவ்வாய், 25 மார்ச், 2014


பள்ளி ஆண்டு விழா 

சென்னை நடுநிலைப் பள்ளி,மடுமா நகர், பெரம்பூர், சென்னை.11.  பள்ளியில் 07.03.2014 அன்று  பள்ளி ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இவ் விழாவில் சிறப்பு விருந்தினார்களாக சென்னை மாநகராட்சி கல்வி அலுவலர் திரு.P.பேரின்பராஜ் அவர்கள், மருத்துவர் திரு.S.மணிகண்டன் அவர்கள், திரு. C.அசோக்குமார்,வட்ட செயலாளர், த.தொ.ப.ஆ.சங்கம் மண்டலம் 4அவர்கள்  திரு.ரகுபதிவட்ட பொருளாளர், த.தொ.ப.ஆ.சங்கம் மண்டலம் 1 அவர்கள்,திருமதி. கேதரின்மண்டல பொறுப்பாளர் அனைவருக்கும் கல்வி இயக்கம் மண்டலம் 4 அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். 






வியாழன், 20 மார்ச், 2014

 எங்கள் பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறமை    

      எங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்கள் மாநகராட்சி அளவில் நடந்த விளையாட்டு போட்டிகளில் பரிசுகள் பல வென்றுள்ளனர்.  மண்டல அளவில் நடந்த போட்டிகளில்   66    மாணவ மாணவியர்கள் வெற்றி பெற்று பரிசுகளைக் கைப்பற்றினர்.               மாநகராட்சி அளவில் நடந்த போட்டிகளில்  4  பேர் முதல் இடத்தையும்,    2 பேர் இரண்டாம் இடத்தையும் ,     8 பேர் மூன்றாம்  இடத்தையும்  பெற்று வெற்றி பெற்றனர்.           மாநகராட்சி அளவில்  நடந்த விளையாட்டு போட்டியில் எங்கள் பள்ளியைச் சேர்ந்த செல்வன். மூ.கார்த்திக்,  செல்வி. மூ. கலைசெல்வி ஆகிய இருவரும் சாம்பியன் கோப்பை பெற்றனர் .                 வணக்கத்திற்குரிய மாநகரத் தந்தை திரு. சைதை துரைசாமி அவர்கள் சாம்பியன் கோப்பை வழங்கும் காட்சி . செல்வன் . மூ.கார்த்திக்,  செல்வி. மூ.கலைச்செல்வி இருவரும் சகோதர சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது .               




உதவிக் கல்வி அலுவலர் திருமதி.ரஞ்சனி , கல்வி அலுவலர்  திரு. பேரின்பராஜ் , துணை மேயர் திரு.பெஞ்சமின் ,   மேயர் திரு. சைதை துரைசாமி, மற்றும் எங்கள் பள்ளி ஆசிரியர்கள் திருமதி.புனிதவதி ,திருமதி.ராஜலக்ஷ்மி 

புதன், 19 மார்ச், 2014

உதவி கல்வி அலுவலர் திரு.சுப்ரமணியன் அவர்களின் பார்வையில் எங்கள் பள்ளி







வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் பாராட்டுகளும்









பெற்றோர்களுக்கான போட்டிகளும் பரிசுகளும்







எங்கள் மாணவர்களிளின் திறமைகளிளின் பதிவுகள்








விளையாட்டு விழா 


எங்கள் பள்ளியில் 07.02.2014  அன்று காலையில் நடைபெற்றது. அதில் சில காட்சிகள் உங்களுக்காக.